Wednesday, February 11, 2009

இப்படியும் சிலர்

எப்படி எல்லாம் வாழ்ந்தோம். வாழ்கின்றோம். ஆனாலும் . ஒருசிலரை வாழ்க்ககையில் மறக்கமுடியாதபடி எப்பொழுதும் நினைத்துப் பார்ப்போம். அந்த வகையில் இங்கே நான் எழுதப்போகும் இப்படீயும் சிலர், என்னுடைய பாடசாலை அநுபவித்தில் நடந்த மறக்கமுடியாத சம்பவம் ஒன்று. எப்போதும், இறந்தவர்கள் வீடு சென்று துக்கம் விசாரிக்கப்போனால் எனக்கு இப்பொழுதும் இச்சம்வத்தை நினைத்தால் அழுகை தன்னாலே வந்து விடும். அடடா நம்ம தனிமதிக்கு ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டதோ என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது. அதற்காக இப்பவே கண்களை குளமாக்கிவிடாதீர்கள்.

உங்கள் எல்லோருக்கும் தெரியும் பாடசாலையில் நாங்கள் படித்தாலும் அதைவிட அதிகமாக, டியூடட்ரியில் பின்னேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் சென்று படிப்பது வழக்கம். அதில் ஆண்கள், பெண்கள் இருவரும் ஒரு வகுப்பில் படிப்போம்.அப்போது நான் 11 ம் வகுப்பின் ஆரம்பம். அதுவே முடிவும் என்பதை பிறகு பார்ப்போம். எல்லோருடனும், அப்போது அதிகமாக பேச மாட்டேன். பயமும், கூச்சசுபாவமும் தான் காரணம். எனக்கு என்று இருக்கும் பெண்பிள்ளைகளுடன் தான் அதிகமாக கதைப்பேன். ஆண்களும் எங்களோடு 6. 7 படித்திருப்பார்கள். அவர்களோ தங்கள் வயதிற்கு ஏற்றது போல ஏதாவது வகையில் நாங்கள் தங்களோடு கதைக்கவேண்டும் என்பதற்காக எத்தனை பிளிம் எல்லாம் காட்டுவார்கள். அதில ஒருவர்.................ம்........சுரேஷ் என்று வைத்துக்கொள்ளவோம். அட எல்லாம் ஒரு சேப்டி தானே. பின்பு இதனை வாசித்து விட்டு ஓ........மதி இங்கதானோ என்று பழசுகளை மனதில்போட்டுக்கொண்டு சாத்திப்போடுவார்கள்.

சுரேஷ் பயங்கர கில்லாடிமாணவன். ஒரு நாளைக்கு கிளாசுக்கு வராவிட்டால் அடுத்தநாள் காலில் முழங்காலில் பெரிய பந்தம் சுற்றியிருப்பார்;. நாங்களுமோ அவனை மிகவும் பரிதாபமாக பார்ப்போம். பதிலுக்கு அவனிடம் நேரடியாக காதலைச் சொல்லாமல் மனதிலே போட்டு எங்களுக்கு மாத்திரம் சொல்லி குமுறும் மாணவி நித்தியா. அவவும் அவனைப்பார்த்து நலம் தானா......உடலும் உள்ளமும் நலந்தானா? என்று சைகையால் கேட்டாள். அதற்கு சுரேஷ் என்ன சொல்லியிருப்பார் என்று எதிர்பார்க்கிறீங்க?....நானே சொல்லிவிடுகிறேன். அவன் காலில் போட்ட பண்டேஜை கழட்டி கையில் பிடித்தபடி காட்டினார்;. வாத்திக்கு பூ சுற்றுவது என்றால் அவரைத்தான் கேட்கவேண்டும். நல்ல வேளை வாத்தி மட்டும் பார்த்திருந்தால் செமசாத்து தான். தப்பிட்டார்.

ஒரு நாள் எங்களைப்படிப்பித்த டீச்சரின் தாயார் இறந்த செய்தி கேட்டோம். அன்று வெள்ளிக்கிழமை. அன்றே வேறு வகுப்பு மாணவர்கள் போய் வந்தனர்hகள். நாங்கள் மறு நாள் போவதாக நினைத்திருந்தோம். சுரேஷ்சுடன் மற்றைய 2 மாணவர்கள் மாத்திரம் சென்று கொஞ்ச ஹெல்ப் செய்து விட்டு வந்தார்கள். அடுத்தநாள். நாங்கள் போக ஆயத்தமானோம். எல்லோரும் காசு சேர்த்து ஒரு சின்னதாக மலர் வளையம் வேண்டிக்கொண்டு போனோம். எங்களுக்கோ வீடு தெரியாது. நாங்கள் சொன்னோம் , போய்ஸ் முன்னே போங்கோ என்று , அதற்கு அவர்கள் இல்லை இல்லை நீங்கள் முன்னுக்குப் போங்க வீடு வந்ததும் சொல்லுவோம் என்று. ( எல்லாம் பிளானோட தான்.) எல்லோரும் நடைதான். இப்படி போகும் போது....சுரேஷ் வந்து சொன்னான். அந்த மலர் வளையத்தை தன்னிடம் தரும்படி, ஏன்டா .....இவர் இப்படி கேட்கிறார் என்று யோசித்து விட்டு அவரிடமே கேட்டோம். எதற்காக அதனை கேட்கிறீங்க? என்று..

அதற்கு அவர் சொன்னார், அந்த டீச்சருக்கு என்னைக்கண்டாலே பிடிக்காது, அதனால இதை கொண்டு போய் கொடுத்தாவது, கொஞ்சம் கொலர் அப், தான் என்றார். நாங்களும் சரி.சரி நீங்களே வைத்துக்கொள்ளுங்கோ என்று சொல்லிவிட்டு. கொடுத்துவிட்டோம். நடந்து கொண்டு போகும் போது....ஒப்பாரியின் ஓலங்கள். எனக்கு இப்படியான வீடுகளுக்கு போவதானால் சரியான பயம். போய் வந்தால்கூட நின்மதியாக நித்திரைகொள்ளமாட்டேன். இப்பவும் தானுங்க. சரியாச்சா....ஓகே வீடு வந்துவிட்டோம்..பெரியநின்மதி. சயிக்கிள்களை விட்டுட்டு நடை தானே. அதனால நின்மதி.
பின்னால வந்திட்டிட்டு இருந்தவங்களைப்பார்த்து கேட்டோம். போகலாமா என்று முதலில் சுரேஷ் கையை அசைத்தான் போங்க என்று. நான் தான் முதலில் போனேன். மனதெல்லாம் ஒரே இருதயம் பயங்கர வேகமாக அடித்துக்கொண்டது. எங்களில் 8 பேர் பெண்கள். அங்கே போனவுடன், அங்கே இருந்த பெரியவர்கள் கையை காட்டினார்கள் உள்ளே போகங்கள் என்று.

அவர்கள் சொன்னபடி உள்ளே போனோம். ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. எனக்கு தலையே சுற்றுவது போல் இருந்தது. அங்கே இறந்த நிலையில் இருந்தவர் யார் என்று நினைக்கிறீங்கள்?... நம்பவேமுடியல்லை. ஒரு வேட்டிகட்டிய வயதான அப்பு. எங்கள் டீச்சரை தேடினோம் அங்கே காணவில்லை. அப்போது இந்த மனதிற்கு, சு10துவாது தெரியாது. ( இப்ப உலகத்தில ஒரு துளியைவிட சிறிதளவு புரிஞ்சிட்டிருக்கிறேன்). அதனால...மௌனாய் கைளைகட்டியபடியும் ஒருவர் கையை ஒருவர் பிசைந்தபடியும் அசடு வழிய நின்றோம். அங்கிருந்தவர்களும் கிர்மினல்ரேஞ்சில எங்களை பார்த்தார்கள். ஒருவாறு மெல்ல, எங்களோடு வந்த கூட்டத்தை நோட்டம் போட்டோம் ம்கூம் ...ஆக்களைக் காணவில்லை. யாரிடம் விசாரிப்பது? இறந்தவர் யார் என்று?

ஓகே....சரியாப்போச்சு...நாங்க வந்த இடம் பிழையான இ.டம்தான் என்று.முடிவு கட்டினோம். நான் அதனை நினைத்து அந்த இடத்திலே அழுதேன். பாவிகள் இவன்கள் எங்களைஇப்படி மாட்டிவிட்டான்களே என்று நினைத்து அழுதேன். பிறகு ஒருவாறு அங்கிருந்து சொல்லாமலே எஸ்கேப். வெளியில வந்தால் ......சிரித்தபடி ஒரு புளக் தள்ளி நிற்கிறாhன்கள். இதில எங்களைப்பார்த்து நக்கல் வேறு. ஐயோ மதி..அவங்க உங்க உறவுக்காறங்களா..? என்று வேறு கேள்வி. நான் சொன்னேன். வாங்க நான் நாளைக்கு போட்டு கொடுக்கிறேன் என்று. பிறகு ப்ளீஸ் மதி வேண்டாம் என்றாங்கள். சரி அது போக அடுத்த தெருதான் எங்கள் டீச்சரின் தாயாரின் இறந்தவீட்டுக்கு போனோம். அங்கே போனவுடன் டீச்சர் எங்களைக்கண்டவுடன் ஓ....என்று அழ ஆரம்பித்து விட்டார்.

சத்தியமாக சொல்லுகிறேன் எனக்கு அழுகை வரவில்லை. எங்களை இப்படி சுற்றவைத்தவர்கள் மீது கோபத்துடன், சிரிப்பு சிரிப்பாகத்தான் வந்தது. ஆனால் நான் சிரிக்கவில்லை. பிறகு என்ன.....கொஞ்ச காலம் நாங்கள் அவர்களோடு கதைப்பதில்லை. பின்பு சரண்டர்தான்.

--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4406

No comments:

Post a Comment